ஈழத்தில் தமிழர்களின் அழிவுக்கும், தமிழகத்தில் மீனவர்களை பழிவாங்கும் செயலில் ஈடுபட்ட இலங்கை அரசுக்கு துணைநின்ற காங்கிரஸ் கட்சியையும் வீழ்த்துவதே நாம்தமிழர் கட்சி கொள்கையாக கொண்டிருந்தது என கட்சியின் மாவட்ட தலைவர் கரு.காளிமுத்து தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வீழ்த்தியமைக்காக ஆலங்குடி அருகேயுள்ள வடகாட்டில் நாம்தமிழர் கட்சியினர் சனிக்கிழமை வீரவணக்க பொதுக்கூட்டத்தில் ஈடுபட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கூட்டத்துக்கு தலைமை அக்கட்சயின் மாவட்டத் தலைவர் கரு. காளிமுத்து தலைமை வகித்தார். வீரவணக்க பொதுக்கூட்டத்தில் மாவட்ட அமைப்பாளர்கள் புதுகை சத்தியமூர்த்தி, நார்த்தாமலை சிவா, சிவ. துரைப்பாண்டியன், சிவகங்கை மாவட்ட அமைப்பாளர் காரைக்குடி மாறன் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் பங்கேற்றனர்.
அக்கூட்டத்தில் கட்சியின் மாவட்டத் தலைவர் கரு. காளிமுத்து கூறுகையில்,
ஈழத்தில் தமிழர்களின் அழிவுக்கும், தமிழகத்தில் மீனவர்களை பழிவாங்கும் செயலில் ஈடுபட்ட இலங்கை அரசுக்கு துணைநின்ற காங்கிரஸ் கட்சியையும் வீழ்த்துவதே நாம்தமிழர் கட்சி கொள்கையாக கொண்டிருந்தது.
அதன்படி ஈழத்தமிழர்கள் மற்றும் தமிழக மீனவர்களின் பிரச்னைகள் மத்தியில் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக இக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் பொறுப்பாளர்கள் பிரசாரம் மேற்கொண்டனர்.
அதன் விளைவாக தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரிய அளவில் சரிவை சந்தித்துள்ளது. இதையடுத்து தமிழனின் விடுதலைக்காக கொல்லப்பட்ட சுபா.முத்துக்குமாரின் நினைவிடத்தில் அவரது கனவை நிறைவேற்றும் விதமாக தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தியமைக்காக இங்கு இத்தகைய வீரவணக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது என்றார்.

0 பிற்குறிப்புகள்:
Post a Comment